கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
வியாச மகரிஷி
"வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே நமோ வை ப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம:"
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்
பொதிகையில் 18.1.2007 முதல் 6.11.2009 வரை ஒளி பரப்பாகிய பகவத் கீதை ஐ பதிவிறக்கம் செய்வதற்கு மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்
கண்ணன் பாடல்கள்
கண்ணன் வந்தான் - பாடல்
விதுரர் நீதி
மஹா பாரதம் நமக்கு கிடைத்த மிகவும் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாகும். நான்கு வேதங்களுக்குப் பின் ஐந்தாவது வேதமாக மஹா பாரதம் கருதப்படுகிறது. மஹா பாரதத்தில் ஒன்றே கால் லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன. மொத்தம் உள்ள பதினெட்டு பர்வத்தில் ஐந்தாவது பர்வமான உத்தியோக பர்வத்தில் விதுர நீதி திருதராஷ்ட்ரன் க்கு கூறப்பட்டுள்ளது.
திருதாஷ்டிரன் சஞ்சயனை பாண்டவரிடத்தில் தூது போய் வருமாறு அனுப்பி வைக்கிறான். சஞ்சயனும் தூது போய் வந்த களைப்பில் காலையில் வந்து விவரம் தெரிவிப்பதாக கூறி சென்றுவிடுகிறான்.திருதராஷ்டிரனுக்கு பாண்டவர்களுக்கு ராஜ்யத்தை பிரித்து கொடுக்க எண்ணமே இல்லை. பாண்டவர்கள் என்ன்ன சொன்னார்களோ என்று எண்ணி மிகவும் துன்புறுகிறான். எனவே உறக்கம் வராமல் வாயில் காப்போனை அழைத்து விதுரரை அழைத்து வர ஆணை இடுகிறான். உறக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசங்களை வழங்குகிறார். இதுவே விதுர நீதி ஆகும்.
அனைவருக்கும் அடியேனது அனேக நமஸ்காரங்கள்.
இந்த ப்ளாக் ல் எழுதப்படும் விஷயங்கள் அனைத்தும் மகான்களின் உபன்யாசங்களில் இருந்து கேட்கப் பட்டவையாகும். முக்கியமாக ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன், கிருஷ்ண பிரேம்ஜி, சுவாமி ஓம்காரனந்தா, நொச்சூர் வெங்கடராமன் மற்றும் பல மகான்களின் மூலம் கேட்கப் பட்டவை ஆகும். அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் எனக்கு புரிந்த வரையில் வியாச மகரிஷியை வணங்கி இதில் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment