பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் போன்றே கவலைபடாமல் இருக்கும் ஒருவரை இந்த பூலோகத்தில் பார்க்க நினைத்தார். பூலோகத்தில் யார்தான் கவலைப் படாமல் இருக்க முடியும். யாரை பார்த்தாலும் எதாவது ஒரு கவலையில் மூழ்கியே இருந்தார்கள்.
கண்ணனின் நண்பன் குசேலன் மிகுந்த வறுமையில் இருந்தாலும் எதற்கும் கவலை கொள்ளாமலேயே இருந்தார். அவர் மனைவி தனது கணவனை அவரது பால்ய நண்பனான கண்ணனை சென்று பார்த்து வருமாறு கேட்டுக் கொண்டாள்.
நாம் வயதோகிரையோ, குழந்தைகளையோ அல்லது மிக்க பிரியமானவர்களையோ பார்க்கச் செல்லும்போது எதாவது எடுத்துச் செல்லவேண்டும். குசேலன் மனைவியும் வீட்டில் இருந்த மிக பழைய அவலை சுத்தம் செய்து எடுத்துச் செல்லுமாறு தனது கணவனைக் கேட்டுக்கொண்டார்.
எடுத்துச் செல்ல பாத்திரம் எதுவும் இல்லாததாலும் மிகவும் குறைந்த அளவே அவல் இருந்ததாலும் தான் கட்டியிருக்கும் துணியிலேயே முடிச்சு போட்டு எடுத்து செல்ல நினைத்தார். துணி எல்லாம் ஓட்டை. அவலை கட்டுவதுற்கு இடமே இல்லை. இருப்பினும் கிழியாமல் இருந்த ஒரு மூலையில் அவலை கட்டி எடுத்துக் கொண்டு தனது பால்ய நண்பனான பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்கச் சென்றார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பால்ய நண்பனைப் பார்த்த சந்தோஷத்தில் குசேலரை கட்டி தழுவிக் கொண்டார். ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து நலம் விசாரித்தார் குசேலர். ஆனால் தனது கஷ்டத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
தான் கஷ்டப் படுவதாக நினைக்கவே இல்லாததால் தான் நன்றாக இருப்பதாகச் சொன்னார். பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணருக்கு தன்னைப்போல் கவலை இல்லாமல் இருக்கும் ஒருவரைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷமடைந்தார். இருப்பினும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பனின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு அவருக்கு செல்வம் அளித்ததாக சரித்திரம்.
நாமும் எதற்கும் கவலை படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனவேதான் இந்த ப்ளாக்கிற்கு குசேலன் என்றே பெயர் வைத்துள்ளேன். ஸ்ரீ கிருஷ்ணரின் அருளினால் நாம் எல்லோரும் சுகமாக கவலைப் படாமல் இருப்போம்.
2 comments:
All your blogs are really excellent, educative and superb. I desire to meet and discuss during my visit to Chennai. Can you reveal your identity and address.
With regards
K.V.Sridharan,
General Secretary,
AIPEU Group C ,
Mobile 09868545552,
New Delhi 110008
very fine
Post a Comment